Tim Hudak

Tim Hudak, MPP
Ontario PC Caucus Leader

அன்பான ஒன்ராறியோ குடும்பங்கள்:

எமது மகத்தான மாகாணத்தின் வருங்காலத்தைப்பற்றி உங்களது எண்ணங்களையும் உத்திகளையும் உங்களிடம் கேட்பதற்காக நான் இன்று எழுதுகிறேன். ‎தனது நிலப்பரப்பிலும் மற்றும் தனது மக்களிலும் பிரமாண்டமான வளர்ச்சிக்கான சக்தியை ஒன்ராறியோ கொண்டிருக்கிறது. ஆயினும் இன்றைக்கு ஒன்ராறியோ ‎எடுத்துச்செல்லும் செயல் மார்க்கத்தைப்பற்றி நான் கவலைப்படுகிறேன். ‎

மாகாணத்தில் நான் பிரயாணம் செய்யும்போது கடினமாக உழைக்கும் குடும்பங்களோடு உரையாடுகையில், அவர்கள் வாழ்க்கைப்பழுவை சமாளிக்க மிகவும் ‎பிரயாசையெடுக்கிறார்கள் என்றும் செலுத்துவது எல்லாம் வரியாக இருந்தும் கூட அரசாங்கம் அவர்களுக்காக மேற்கொண்டு எதையுமே செய்வதில்லை என்றும் ‎எனக்கு சொல்கிறார்கள்.

எமது மாகாணத்தின் எதிர்காலத்திற்கும் மற்றும் மேற்கொண்டு எப்படி நாம் முன்னேறுவது என்பதற்கும் சிறந்த அறிவுரைஉங்களைப்போன்ற குடும்பங்களிடம் ‎‎இருந்துதான் வரும் என நான் நம்புகிறேன்.உங்களுக்கு நாம் எப்படி யதார்த்தமான வரிநிவாரணம் வழங்கலாம் என்றும், அவசியம் தேவைப்படுகின்ற ‎விடயங்களைப்பற்றி அரசாங்கம் கவனமெடுப்பதற்கும் சிறந்த தனியார்நிறுவன உத்தியோகங்களை ஏற்படுத்துவதற்குமாகத்தான், நான் உங்களின் ‎ஆலோசனைகளை விரும்புகிறேன்.

‎உங்களுடைய விளக்கத்தையும் கருத்துகளையும் நான் எதிர்பார்க்கிறேன்.

உண்மையுள்ள,

Tim's Signature

Have Your Say Ontario